By Election: இந்த தேர்தலுக்கும் தயாராகுங்கள்.. 5 மாநில இடைத்தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற நவம்பர் 17ம் தேதியும், வேட்புமனு பரிசீலனை நவம்பர் 18ம் தேதியும் நடைப்பெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நவம்பர் 21ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Election Commission of India (ECI) announces date for bye polls in Odisha, Rajasthan, Bihar, Uttar Pradesh and Chhatisgarh
— ANI (@ANI) November 5, 2022
Polling to be held on December 5; counting on December 8 pic.twitter.com/BXdMZLnPaE
அடுத்த மாதம் பல மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1 மக்களவைத் தொகுதியும், 5 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், ஒடிசாவின் பதம்பூர் சட்டசபை தொகுதி, ராஜஸ்தானின் சர்தார் சிட்டி, பீகாரில் குர்ஹானி, சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் மற்றும் உ.பி.,யின் ராம்பூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
குஜராத்: டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல்
குஜராத்தில் சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இமாச்சலப் பிரதேசத்துடன் இணைந்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ம் தேதியும் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.