மேலும் அறிய

Begum Hazrat Mahal: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் படையை நடுநடுங்க வைத்த இஸ்லாமிய வீரமங்கை பேகம் ஹஸ்ரத் மஹால்! யார் இவர்?

ஆங்கிலேய அரசுக்கு எதிராக தனது மண் மற்றும் மக்களுக்காக கடைசி வரை போரிட்டு வீரமரணம் அடைந்த ராணி பேகம் ஹஜ்ரத் மஹால் பற்றிய தொகுப்பு

பேகம் ஹஸ்ரத் மஹால் 1857 இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட வீரப்பெண்மணி ஆவார். இவர் ஆவாதில் உள்ள ஃபைசாபாத்தில் பிறந்தவர். ஆங்கிலேயரை எதிர்த்து  சுதந்திரத்திற்காக போராடிய வீரப் பெண்களின் பெயர்களை வரலாற்றில் எடுத்துப் பார்த்தால் பேகம் ஹஜ்ரத் மஹாலுக்கு முக்கிய இடமுண்டு. பேகம் ஹஸ்ரத் மஹால் போன்று அறியப்பாடாத வீர மங்கைகள் பலர் இருக்கின்றனர்கள். அன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் வேண்டி இந்தியாவில் ஆங்காங்கே கிளர்சிகள் நடந்து கொண்டு இருந்த சமயம். 1857ல் லக்னோவில் அந்த கிளர்ச்சிகள் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் நடைப்பெற்றது.

ஹஸ்ரத் அரியணையில் ஏறிய காலம் :

Begum Hazrat Mahal: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் படையை நடுநடுங்க வைத்த இஸ்லாமிய வீரமங்கை பேகம் ஹஸ்ரத் மஹால்! யார் இவர்?

பேகம் ஹஸ்ரத் மஹாலின் தந்தை பெயர் அம்பர் என வரலாற்றில் குறிப்பிடிப்படுகிறது. இவர் ஒரு ஆப்பிரிக்க அடிமை எனவும் கூறப்படுகிறது. ஹஸ்ரத்திற்கு இருந்த இசை மீதான ஆர்வம் தன்னை சிறு வயதில் இசை பள்ளியில் இணைத்து கொண்டார். அதைதொடர்ந்து, வாஜித் அலி ஷா மன்னர் ஹஸ்ரத் மஹாலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு 1845ல் ஒரு மகனை பெற்று எடுத்ததன் மூலம் அரண்மனையில் ராணி அந்தஸ்து பெற்றார் ஹஸ்ரத். பின்னர், குறுகிய காலத்தில் ஒளத் நவாப் வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி நாடு கடத்தினர். பின்பு, வஜித் அலிஷாவின் மகனான பிரிஜிஸ் காதிர் மன்னர் ஆனார். ஆனால், அவருக்கு வயது  குறைவு என்பதால் நிர்வாகத்தை அவரது அம்மாவான ஹஸ்ரத் நிர்வகித்து கொண்டார். பேகம் ஹஸ்ரத் மஹாலின் தலைமையில் அவ்வப்போது அரசவை கூடி ஆங்கிலேயர் ஏகாத்திபத்தியத்தை எதிர்க்க திட்டங்கள் வகுத்து முனைப்பு காட்டி வந்தார். இது ஆங்கிலேயருக்கு எரிச்சல் ஊட்டும் செயலாக இருந்தது.

ஹஸ்ரத் ராணியின் படையெடுப்பு:

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஹஸ்ரத் தனது படையுடன் சென்று லக்னோவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை முற்றுகையிட்டார். அப்போது ஹஸ்ரத்திடம் இருந்த படையின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால், அவரின் துணிச்சலான படை அங்கிருந்த பிரிட்டீஷ்காரர்களை சிறைப் பிடித்ததோடு பிரிட்டிஷ் தூதரகத்தை இடித்து சுக்குநூறு ஆக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் ஹஸ்ரத்திற்கு செல்வாக்கு பெருகியது. இன்னும் விரிவாக செல்ல வேண்டுமானால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 
பேரக்பூரில் தனது சொந்த படையை அங்கிருந்து கலைத்தது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையானவர்கள், ஒளத் பகுதியைச் சார்ந்த முஸ்லிம்கள். இவர்களை படையில் வைத்திருந்தால் கிளர்ச்சியில் ஈடுபட அதிக வாய்ப்பு இருக்கிறது என எண்ணி கலைத்தாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹஸ்ரத்தின் இறுதிகாலம்:

Begum Hazrat Mahal: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் படையை நடுநடுங்க வைத்த இஸ்லாமிய வீரமங்கை பேகம் ஹஸ்ரத் மஹால்! யார் இவர்?

பேகம் ஹஸ்ரத்தின் நடவடிக்கைகள் ஆங்கிலேய அரசை மேலும் கோபம் அடைய செய்தது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஹஸ்ரத்திற்கு ஆங்கிலேய அரசின் படை பலத்தின் பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவும் 1858 மார்ச் 6 ஆம் தேதி சுமார் 30 ஆயிரம் வீரர்களுடன் வந்த மேஜர் காலின்
போர் தொடுத்தார். இந்த போரானது ஐந்துநாட்கள் வரை நீடித்தது. ஹஸ்ரத்தின் படை மேஜர் ஹட்ஸன்னை கொன்றது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பேகம் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேரி நேபாளத்தில் தஞ்சம் புகுந்தார். அப்போது நேபாளத்தை ஆண்ட அரசும் அவருக்கு தஞ்சம் கொடுக்க பயந்தது. வறுமையில் உச்சத்தில் இருந்த போதும் தனது படையுடன் மண்டியிடாமல் தனது மண்ணுக்காக போராடி 1874–ல் காத்மாண்டுவில் காலமானார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Arvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..Extra Price in TASMAC |’’அநியாயம் பண்றாங்க’’பாட்டிலுக்கு 10 ரூபாய் EXTRA! புலம்பும் மதுபிரியர்கள்KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Kylian Mbappe: பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
6 Airbag Cars: உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!
உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!
MI Vs KKR, IPL 2024: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வேகத்தை தடுக்குமா மும்பை? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!
MI Vs KKR, IPL 2024: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வேகத்தை தடுக்குமா மும்பை? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Embed widget