ராகுல் காந்தியை ஆதரித்தாரா விராட் கோலி? தேர்தல் முடிவுகள் வெளியானபோது வைரலான போலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி!
புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கோலி காங்கிரஸ் அல்லது ராகுல் காந்தியை ஆதரிக்கும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை என்றும் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தை செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்நாடக தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில், ராகுல் காந்தியை ஆதரித்து விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று பதிவிட்டதாக வலம் வந்த ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலான நிலையில் அது போலியானது என்று தெரியவந்துள்ளது.
ராகுலை ஆதரித்தாரா கோலி?
புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கோலி காங்கிரஸ் அல்லது ராகுல் காந்தியை ஆதரிக்கும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை என்றும் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தை செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 34 வயதான ஜாம்பவான் பேட்ஸ்மேன் தற்போது ஐபிஎல் 16வது சீசனில் பிஸியாக விளையாடி வருகிறார். நேற்றைய தினம் அவருடைய இன்ஸ்டா ஹேண்டிலில் இரண்டு ஸ்டோரிகள் மட்டுமே காணப்பட்டது.
Virat Kohli is on 🔥, hope he doesn’t delete it
— Dr Nimo Yadav (@niiravmodi) May 13, 2023
#KarnatakaElectionResults2023 pic.twitter.com/qf6C3w36GH
அவர் வெளியிட்டிருந்த உண்மையான ஸ்டோரி
அதில் ஒன்று முந்தைய நாளான, மே 12 அன்று வெளியிடப்பட்ட ஸ்டோரி ஆகும். வெள்ளிக்கிழமை வான்கடே ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்த சூர்யகுமார் யாதவை வாழ்த்திய பதிவுதான் இருந்தது. கோஹ்லி தற்போது ராஜஸ்தானின் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று (மே 14, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 60-வது ஆட்டத்தில் விளையாட உள்ளார்.
காங்கிரசின் வெற்றி
கர்நாடகா தேர்தலில், காங்கிரஸின் வெற்றியானது பெருமளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சி செய்த ஒரே தென் மாநிலத்திலிருந்தும் பாஜகவை அதிகாரத்திலிருந்து வெளியேற்றியிருப்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமின்றி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் டிரெய்லர் என்று கூறப்பட்ட இந்த கர்நாடக தேர்தலில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்திருப்பதால் இது அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hello @imVkohli why did you delete it? Were you forced to delete it?? pic.twitter.com/ae5x62xY9Z
— Ammu (@antifascisttt) May 13, 2023
பதிவிற்கு வந்த டிரோல்
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. குமாரசாமியின் மஜத 19 சீட்டுகளையும், உதிரி கட்சிகள் 4 சிட்டுகளையும் வென்றுள்ளனர். இந்நிலையில் விராட் கோலி 'the man, the myth, the leader' என்ற பிரபலமான சொற்றொடர் கொண்டு வாழ்த்துவது போன்று அந்த பதிவு எடிட் செய்யப்பட்டிருந்தது. அதனைத் டெலிட் செய்ததாக பரவிய பதிவுகளின் கீழ் பலர், சொல்லிவிட்டு பின்வாங்காமல் இருக்கக் கூட தைரியம் இல்லாதவர் எப்படி கோப்பையை வெல்ல முடியும் என்றெல்லாம் சம்மந்தம் இல்லாமல் பேசிய பதிவுகள் பலவும் தற்போது அந்த பதிவே பொய்யென்று தெரிந்த பின்பு ட்ரோல் செய்யபட்டு வருகின்றன.