நீண்ட நாள் போராட்டம்..போக்குவரத்து ஊழியர்களுக்கு செவி சாய்க்குமா அரசு? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வருகின்ற டிசம்பர் 13 ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சென்னை எம்டிசி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க நிர்வாகிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆறுமுகம், போக்குவரத்து கழகங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்.
அவை குறிப்புகளாக...!
- அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- 2015ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
- கூடுதல் நேரம் பணி செய்யும் ஓட்டுநர், நடத்துநருக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். நடத்துநர் இல்லா பேருந்து சேவையை நிறுத்த வேண்டும்.
- ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் 2020 மே மாதம் முதல்வழங்கப்படவில்லை - அதை மீண்டும் வழங்க வேண்டும்.
- போக்குவரத்து விதிமீறல் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
பணப்பலன்கள்:
கடந்த 2022 ம் மே முதல் 2011 மார்ச் வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கு ரூ.242.67 கோடி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, பணப்பலன்கள் வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 22 விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கு காசோலைகளை வழங்கினார். அதேபோல், ஏனௌட 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது.