மேலும் அறிய

Kanimozhi: அரசியலுக்காக மகளிரை கேடயமாக பயன்படுத்துவீர்களா? - மக்களவையில் சீறிய கனிமொழி!

தொகுதி மறுவரையறை திட்டத்தை 25 ஆண்டுகள் ஒதுக்கி வைப்பதாக அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிவித்தார். இந்த சட்டத்தால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்பட்டால் பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது.

பாஜக மகளிரை அரசியலுக்காக ஒரு கேடயமாக பயன்படுத்துவதாக கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய கனிமொழி, “நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துக் கொண்டிருக்கும்போது எதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசிதழில் வெளியிட்டப்பது?” என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் 8 கோடி மக்களின் குரலாக பேசுகிறேன்.  கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிகளவில் கவனம் செலுத்தியது. அந்த மாநிலங்களால் சிறப்பாக மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு சிறு குடும்பங்கள் உருவாகியது. 2001 காலக்கட்டங்களில் தென் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய மக்களின் குரலை கேட்கும் மத்திய அரசு இருந்தது. 

தொகுதி மறுவரையறை திட்டத்தை 25 ஆண்டுகள் ஒதுக்கி வைப்பதாக அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிவித்தார். இந்த சட்டத்தால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்பட்டால் பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது. தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.6 சதவிகிதம் தான். அமெரிக்கா, பிரான்ஸை விட குறைவான பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. 

மக்கள் தொகை கணக்கீட்டை கொண்டு நீங்கள் தொகுதி மறுவரையறை செய்வதாக சொன்னாலும் அது 15 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையாகும். ஆக, உண்மையில் மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். ஆனால் மத்திய அரசு தொகுதிகள் உயரும் என கூறுகிறது. பாஜக தனது சொந்த சதி திட்டத்தை நாட்டின் மீது சுமத்தவே இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி விருப்பம்போல தொகுதி மறுவரையறையை செய்து நாட்டின் அரசியல் சூழலை மாற்ற நினைக்கிறது. தொகுதிகள் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்த்தப்படும் என கூறும் அமித்ஷா அதனை செயல்படுத்த முடியுமா?, தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவை நீங்கள் செல்லாதது ஆக்குவீர்களா?

ஒருவேளை தொகுதி மறுவரையறை மசோதா சிறப்பானது என்றால் ஏன் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை பெறவில்லை?, மகளிர் உரிமைக்காக பாஜக குரல் கொடுக்கிறது என்றால் நாங்கள் நம்ப வேண்டுமா?, மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி. மகளிரை பாஜக அரசியலுக்காக ஒரு மனித கேடயமாக பயன்படுத்துகிறது. தற்போதுள்ள 543 உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தொகுதிகளை 850 ஆக உயர்த்தினால் தெற்கில் இருந்து ஒரு வாக்கு கூட பெறாமல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியும்” என அவர் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget