கிட்னி டேமேஜ் ஆகும்.. இந்த பழக்கத்தை கைவிடுங்க

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தண்ணீர் குறைவாக குடிப்பதால் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகங்களில் அழுத்தம் அதிகரிக்கும்.

அதிக உப்பு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரித்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்துவதால் குறுகிய காலத்திலேயே சிறுநீரக செயல்பாடு குறையும்.

சிறுநீரை அடிக்கடி அடக்குவதால் தொற்று மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும்.

உணவில் அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீரகங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

உயர் புரத உணவை உட்கொள்வது சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் இரத்த ஓட்டத்தை பாதித்து சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.

உடற்பயிற்சி செய்யாததால் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து சிறுநீரகங்களைப் பாதிக்கும்.