வாகன பதிவு எண்ணில் SE X சீரிஸ்.! பாதிக்கப்பட்ட இளம்பெண் - தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் !
பெண் ஒருவரின் ஸ்கூட்டருக்கு ஆர்டிஓ அலுவலகம் கொடுத்த பதிவு எண் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.
புதிதாக ஒரு வாகனம் வாங்கிய பிறகு நாம் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பது அந்த வாகனத்திற்கு தரப்படும் பதிவு எண்ணிற்காக தான். அதில் சிலர் தங்களுக்கு ராசியான எண் தான் வேண்டும் என்று அதற்காக செலவு செய்யவும் தயங்கமாட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் நமக்கு வரும் எண்ணே ஒரு ராசியான எண் காத்திருப்பார்கள். அப்படி வரும் பதிவு எண் நமக்கு ராசியானதாக இருக்கவில்லை என்றால் கூட பிரச்னை தரும் வகையில் அமைந்துவிட கூடாது.
அப்படி ஒரு பெண்ணிற்கு வந்த வாகன பதிவு எண் பெரிய பிரச்னையை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது. அவருக்கு நடந்தது என்ன?
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒவருர் சமீபத்தில் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ஸ்கூட்டருக்கு வாகன பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த வாகன பதிவில் அவருக்கு வந்த பதிவு எண்கள் மற்றும் எழுத்துகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவருக்கு SEX என்ற சீரிஸில் வாகன நம்பர் வந்துள்ளது. இதைப் பார்த்து அந்தப் பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனினும் அந்த நம்பருடன் தன்னுடைய வாகனத்தை அவர் சில நாட்கள் இயக்கியுள்ளார். அப்போது இவருடைய வண்டி சீரிஸை பார்த்து பலரும் கிண்டல் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இவரிடம் தவறாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொல்லை தாங்க முடியாமல் அப்பெண் டெல்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் டெல்லி ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இந்தப் பெண்ணிற்கு உடனடியாக அந்த வண்டி பதிவு எண் சீரிஸை மாற்றி கொடுக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த சீரிஸில் தற்போது டெல்லியில் பதிவாகியுள்ள வாகனங்களின் மொத்த விவரத்தையும் அந்த ஆணையம் கேட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாகன நம்பர் சீரிஸை நான்கு நாட்களுக்குள் மாற்றி கொடுக்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: நாளை நண்பகல் கரையைக் கடக்கும் ஜாவித் புயல் - வானிலை மையத்தின் புதிய எச்சரிக்கை!!