கருணை கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் நபர்...தடுத்த நிறுத்த போராடும் தோழி
அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது நண்பர் கருணைக்கொலை செய்து கொள்ள சுவிட்சர்லாந்திற்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அதை தடுக்கக் கோரி பெண் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது நண்பர் கருணைக்கொலை செய்து கொள்ள சுவிட்சர்லாந்திற்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அதை தடுக்கக் கோரி பெண் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
Woman approaches Delhi HC to stop sick friend from travelling to Switzerland for euthanasiahttps://t.co/lFPzbtkMKh
— ThePrintIndia (@ThePrintIndia) August 12, 2022
49 வயதான மனுதாரர் தனது மனுவில், "40 வயது மதிக்கதக்க எனது நண்பர் கருணை கொலை செய்து கொள்ள வெளிநாட்டிற்கு பயணிக்க வேண்டியுள்ளது. மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்க வேண்டாம் என்று மத்திய அரசை உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் நோய் என்பது சிக்கலான, வலுவிழக்கச் செய்யும், நீண்டகால நரம்பு அழற்சி நோய் ஆகும். மேலும் மனுதாரரின் நண்பருக்கு, 2014 இல் நோயின் முதல் அறிகுறி தென்பட்டுள்ளது. நடமாடக் கூட முடியாமல் படுக்கையில் கிடக்கிறார் என்றும் வீட்டுக்கு உள்ளேயே அரிதாகதான் நடக்கிறார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது நண்பர் முன்பு எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால், நன்கொடையாளர் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக கொரோனா காலத்தில் அதைத் தொடர முடியவில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "இந்தியாவிலோ வெளிநாட்டிலோ சிறந்த சிகிச்சையை மனுதாரரின் நண்பருக்கு வழங்குவதில் நிதி சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அவர் இப்போது கருணைக்கொலைக்கு செல்ல தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனால் அவரது வயதான பெற்றோரின் வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கிறது. அவரது உடல்நிலை மேம்படுவதற்கான நம்பிக்கையின் கதிர் இன்னும் தொடர்கிறது என்பதை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
சிகிச்சை பெறுவதாக பொய் சொல்லிவிட்டு சுவிட்சர்லாந்திற்கு கருணை கொலை செய்து கொள்வதற்காக விசா பெற்ற தனது நண்பரின் உடல்நிலையை பரிசோதிக்கவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் மருத்துவ குழுவை அமைக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்