Crime Murder Fridge Stored Body : ஃப்ரிட்ஜில் காதலி உடல்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. டெல்லி கொலை வழக்கில் பகீர் பின்னணி..!
டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே கேபிள் வயரை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதே போன்ற கொலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே காதலியை கொலை செய்யும் கொடூரம் சமீபகாலமாக தொடர் கதையாகி வருகிறது.
தொடரும் கொடூரம்:
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே கேபிள் வயரை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஷ்ரத்தா கொலை வழக்கைப் போன்று, 24 வயதான சாஹில் கெலாட், தனது காதலியைக் கொலை செய்து அதை மறைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி நிக்கி யாதவை வாக்குவாதத்திற்குப் பிறகு கொலை செய்துள்ளார். மேலும், தன்னுடைய குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் உடலை மறைத்து வைக்க முடிவு செய்திருக்கிறார்.
இதில், தற்போது வெளியான அதிர்ச்சி தகவலின்படி, கொலை நடந்த அதே நாளில் சாஹில் கெலாட், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு சென்று பல நாள்கள் கழித்துதான், சாஹிலுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது காதலி நிக்கிக்கு தெரிய வந்துள்ளது.
கொலை செய்த அதே நாளில் வேறு பெண்ணுடன் திருமணம்:
இதையடுத்து, சாஹிலுடன் சண்டையிட்டுள்ளார் நிக்கி. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாக, நிக்கியை கழுத்தை நெரித்து கொலை செய்து சொந்தமான உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மறைத்துள்ளார்.
நிக்கியின் பக்கத்து வீட்டுக்காரர் அவர் காணவில்லை என்று புகார் செய்துள்ளார். ஹரியானாவின் ஜஜ்ஜரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அவர் எங்கே சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து, சாஹிலை போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
நிக்கியும் சாஹலும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் போது சந்தித்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். சாஹிலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை சுனில் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக வீட்டின் படிக்கட்டில் நிக்கி நடந்து செல்வது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஷ்ரத்தா கொலை வழக்கில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கியுள்ளார் ஆப்தாப்.