மேலும் அறிய

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. அதிரடி காட்டும் கெஜ்ரிவால்.. சிபிஐக்கு பறந்த நோட்டீஸ்!

தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐ-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் (ED) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் 
வழங்கியது.

கெஜ்ரிவாலுக்கு தொடர் நெருக்கடி: இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். இதற்கிடையே, ED விசாரித்து வந்த அதே மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இச்சூழலில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி, மூன்று நாள் சிபிஐ காவலுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஜூலை 12ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம்: சிபிஐ விளக்கத்திற்கு பிறகு ஏதேனும் சொல்ல வேண்டுமானால் விளக்கம் அளித்த இரண்டு நாள்களுக்குள் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

"விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பதில்லை. மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்" என விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதிட்டது. 
 
"குற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் காட்டினோம். ​2021-22இன் புதிய கலால் கொள்கையின் கீழ் மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது குறித்து எந்த நியாயமான விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.

இரண்டாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்தபோது, ​​தெற்கு குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் டெல்லியில் முகாமிட்டு கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான விஜய் நாயரை சந்தித்துள்ளனர். இதையடுத்து, ​​ஒரே நாளில் கலால் கொள்கை அவசரமாக திருத்தப்பட்டது அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. ஏன் இப்படி செய்யப்பட்டது என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை" என சிபிஐ தரப்பு விசாரணை நீதிமன்றத்தில் வாதிட்டது.

 

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget