Delhi Crime: டெல்லி இளம்பெண் மரணம்: மோதிக்கொள்ளும் ஆம் ஆத்மி மற்றும் லெப்டினன்ட் கவர்னர்..!
Delhi Crime: டெல்லியில் இளம் பெண் மரணம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும் டெல்லி லெப்டினன்ட் கவர்னருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
![Delhi Crime: டெல்லி இளம்பெண் மரணம்: மோதிக்கொள்ளும் ஆம் ஆத்மி மற்றும் லெப்டினன்ட் கவர்னர்..! Delhi Crime: AAP, Lt Governor At Loggerheads Over Death Of Delhi Woman Dragged By Car New Year Morning Delhi Crime: டெல்லி இளம்பெண் மரணம்: மோதிக்கொள்ளும் ஆம் ஆத்மி மற்றும் லெப்டினன்ட் கவர்னர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/7ca72a5c3f69713a019c287156691c541672716079820224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Delhi Crime: டெல்லியில் கார் மோதியதில் 12 கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் 20 வயது இளம்பெண் பலியான விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-வுக்கும் டெல்லி லெப்டினன்ட் கவர்னருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியை கார் மீது மோதியதில் 12 கிலோமீட்டர் தூரம் வாகனத்தின் அடியில் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார் என்று போலீசார் புத்தாண்டு தினத்தன்று தெரிவித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
மாருதி சுசுகி பலேனோ காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி (20) உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமையா..?
அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 3.24 மணிக்கு கார் ஒன்று உடலை இழுத்துச் செல்வது போல ஒரு அழைப்பு வந்தது. அதிகாலை 4.11 மணியளவில் சாலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு மீண்டும் அழைப்பு வந்தது. அதன்பிறகு, போலீசார் ரோந்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் கூறி வாகனத்தை தேடத் தொடங்கி, பெண்ணின் உடலை கைப்பறியுள்ளனர்.
"பதிவு செய்யப்பட்ட கார் எண்ணின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் கார் ஸ்கூட்டியில் விபத்துக்குள்ளானதாகக் கூறினார், ஆனால் அவர் தங்கள் காருடன் பல கிலோமீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டது அவர்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்" என்று டெல்லி போலீஸ் அதிகாரி ஹரேந்திர கே சிங் கூறினார். இது ஒரு கற்பழிப்பு வழக்கு என்று கூறி சமூக ஊடகங்களில் சில பதிவுகள் போலியானவை என்றும், அத்தகைய பதிவை பகிர்பவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி VS லெப்டினன்ட் கவர்னர்
இந்த விவகாரம் குறித்து டெல்லி லெப்டினன்ட் கவர்னர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ”கன்ஜாவ்லா-சுல்தான்புரியில் நடந்த மனிதாபிமானமற்ற குற்றத்திற்காக நான் வெட்கித் தலை குணிகிறேன், குற்றவாளிகளின் கொடூரமான செயலால் நான் அதிர்ச்சியடைந்தேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும், அவர்களிடம் விசாராணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான ஒவ்வொரு ஆதரவும்/உதவி ஆகியவை அதற்கு அப்பாலும் உறுதிசெய்யப்பட்டாலும், சந்தர்ப்பவாத துப்புரவுத் தொழிலை நாடவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் பொறுப்பான மற்றும் உணர்திறன் மிக்க சமூகத்தை நோக்கி நாம் ஒன்றாக வேலை செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் ஆளும் அரசான ஆம் ஆத்மியின் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் இது கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு என்று கூறினர். லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். மேலும் டெல்லி காவல்துறை இந்த விஷயத்தை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)