மேலும் அறிய

DCW Chief Swati Maliwal: குழந்தை பருவத்தில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்...குஷ்புவை தொடர்ந்து DCW தலைவர் அதிர்ச்சி..!

மூத்த பத்திரிகையாளரான பர்கா தத் உடனான தன் உரையாடலின்போது தன் சொந்த தந்தையாலேயே தான் பாலியல் வன்முறையை சந்தித்தேன் எனும் அதிர்ச்சிகர தகவலை குஷ்பு பகிர்ந்திருந்தார்.

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தன் சொந்த தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சமீபத்தில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மூத்த பத்திரிகையாளரான பர்கா தத் உடனான தன் உரையாடலின்போது தன் சொந்த தந்தையாலேயே தான் பாலியல் வன்முறையை சந்தித்தேன் எனும் அதிர்ச்சிகர தகவலை குஷ்பு பகிர்ந்திருந்தார்.

டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர்:

இந்த அதிர்ச்சியின் தாக்கமே குறையாத நிலையில், டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இதே போன்ற தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவர் என்னை அடிக்கடி அடிப்பார். அவர் வீட்டிற்கு வரும் போது எல்லாம் நான் பயந்து, படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். 

ஒவ்வொரு இரவும் பெண்களுக்கு அவர்களின் உரிமையைப் பெற எப்படி உதவ வேண்டும், குழந்தைகளைச் சுரண்டும் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையே யோசித்து கொண்டிருப்பேன். போனிடெயிலை பிடித்து சுவரில் எனது தலையை மோதுவார். எனக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வரும். 

அதை மறக்க ரொம்ப நாள் ஆச்சு:

ஒரு நபர் பல கொடுமைகளுக்கு ஆளாகும்போது தான் மற்றவர்களின் வலியைப் புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். அது முழு அமைப்பையும் அசைக்கக்கூடிய நெருப்பை எழுப்புகிறது. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தையுடன் வாழ்ந்தாள். இந்த சம்பவம் பல முறை நடந்தது.

மறக்காமல், மன்னிக்காமல், அதை என் பின்னால் வைத்துவிட்டு முன்னேறிச் செல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது. சிறுவயதில் என் தந்தையால் நான் சந்தித்த துன்புறுத்தல் கடினமான விஷயம். ஒரு குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளானால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும்" என்றார்.

அடுத்தடுத்து இரண்டு பிரபலங்கள், தங்களின் தந்தைகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோம் என தெரிவித்திருப்பது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுபவங்களை பகிர்ந்து கொண்ட குஷ்பு: 

முன்னதாக, குஷ்பு அளித்த பேட்டியில், "என் அம்மா மிகவும் மோசமான திருமண வாழ்வை வாழ்ந்துள்ளார். என் தந்தை தனது மனைவியை அடிப்பது தனது உரிமை என்று நினைத்தவர். அவரது குழந்தைகளை அடித்து, அவரது ஒரே மகளான என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார். பாலியல் துன்புறுத்தல்களை நான் என் 8 வயதில் எதிர்கொள்ளத் தொடங்கினேன். 15 வயதில் தன் அவருக்கு எதிராக பேசும் தைரியம் எனக்கு வந்தது.

எதுவாக இருந்தாலும் கணவனைக் கடவுளுக்கு நிகராகக் கருதும் நிலையில் என் அம்மா இருந்தார். எனவே நான் இதைச் சொன்னால் என் அம்மா நம்பமாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் என் 15 வயதில் பொறுத்தது போதும் என்று உணர்ந்து அவரை எதிர்க்கத் தொடங்கினேன்.  எனக்கு 16 வயது கூட ஆகவில்லை. எங்களை என் தந்தை அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அடுத்தவேளை உணவுகூட கிடைக்காமல் தவித்தோம்” என கூறி இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Fengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget