(Source: ECI/ABP News/ABP Majha)
Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காந்தீங்க" - பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!
Caste Atrocities : பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் 13 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Caste - Minority Atrocities : சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லிக்கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்:
இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் பட்டியலின இளைஞரும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கில்லா ஏரியில் அமர்ந்திருந்தனர்.
இவர்கள் சச்சின் லமானி (18), முஸ்கன் படேல் (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு இஸ்லாமிய ஆண்கள் 13 பேர் வந்து இவர்கள் இரண்டு பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "ஒரு இந்துவும் முஸ்லீமும் ஏன் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள்" என்று கேட்டு சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
மேலும், இளைஞர் சச்சினை குழாய் கம்பி மூலம் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். பின்னர், இருவரின் மொபைல் போன்களை வாங்கி வைத்து, ஒரு அறைக்கு அழைத்து சென்று நேற்று மாலை வரை ஈவு இரக்கமின்றி அடித்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஈவு இரக்கமின்றி தாக்கிய கும்பல்:
புகாரின் பேரில் 13 பேர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் சச்சின் கூறுகையில், "நாங்கள் ஏரிக்கரையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது அங்கு வந்த நபர்கள், ஒரு இந்துவும் முஸ்லீமும் ஏன் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள். அவர்கள் எங்கள் இருவரின் தொலைபேசிகளையும் எடுத்துக் கொண்டனர். என்னிடம் இருந்த 7,000 ரூபாயையும் பறித்தனர். அரசு திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்றபோது இந்த பிரச்சனை ஏற்பட்டது.
நாங்கள் அரசு திட்டத்திற்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, மதிய உணவு நேரம் என்பதால் ஒரு மணிநேரம் கழித்து அதிகாரிகள் எங்களை வரச் சொன்னார்கள். இதனால், நாங்கள் ஏரியில் அமர்ந்திருந்தோம். அந்த கும்பல், எங்களிடம் வந்தபோது மதுபோதையில் இருந்தனர்.
ஒரு கம்பியால் எங்களை பலமுறை தாக்கியுள்ளனர். பின்னர், ஒரு அறைக்கு அழைத்து சென்று மாலை வரை கொடூரமாக அடித்தனர்” என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
திருடச்சென்ற இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் - வேலூரில் பரபரப்பு.. நடந்தது என்ன?