COVID: புரட்டி எடுக்கும் கொரோனா; பொது இடங்களில் கூடாதீங்க! - இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்கள் என்னென்ன?
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
![COVID: புரட்டி எடுக்கும் கொரோனா; பொது இடங்களில் கூடாதீங்க! - இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்கள் என்னென்ன? COVID Indian Medical Associaton Advises to People avoid public gatherings for fresh covid scare in world COVID: புரட்டி எடுக்கும் கொரோனா; பொது இடங்களில் கூடாதீங்க! - இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்கள் என்னென்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/23/4f52e4c47a87ed6a9cbdf66669e508251671774898317571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ், அதாவது சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என குறிப்பிடாமல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என குறிப்பிடுகிறது. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக காட்டப்படுகிறது. ஆனால், தகன மையங்களில் உடல்கள் நிரம்பி வழிவதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன.
சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க காராணமே ”ஜீரோ கோவிட்” என்ற நடைமுறையை சீன அரசு நடைமுறைப்படுத்தி மக்களை எந்தவிதமான கட்டுப்பாடுகள் இன்றியும், குறைந்த பட்சம் முகக்கவசம் அணியக் கூட அரசு அறிவுறுத்தாததுதான் காராணம் என கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்
சீனாவைப்போல், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருமண விழாக்கள், அரசியல் நிகழ்வுகள், சமூகக் கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் கூட வேண்டாம் எனவும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ ( IMA) அறிவுறுத்தியுள்ளது. தற்போது பண்டிகை காலங்களும் நெருங்கி வருவதால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
In view of the sudden surge of COVID cases in different countries, the Indian Medical Association alerts and appeals to the public to follow COVID appropriate behaviour with immediate effect. pic.twitter.com/i0uLlQ2Dqx
— ANI (@ANI) December 22, 2022
இதைஅடுத்து, சானிடைசரைக் கொண்டு தொடர்ந்து கைகளைக் கழுவவும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுவதோடு இல்லாமல், டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பாக ஐஎம்ஏ ( IMA) ஆலோசனை நடத்தியது. அப்போது கூறியிருப்பதாவது, தற்போதைய நிலையை பற்றி மக்கள் கவலை அடையத் தேவையில்லை என்றும், தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது அந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தாதது என்றும் ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)