Coronavirus Vaccine for Children: 6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் செலுத்த அனுமதி!
Coronavirus Vaccine for Children:6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசிகளை கட்டுப்பாட்டுடன் கூடிய அவசர காலத்திற்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ((DCGI) அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவில் 6 முதல் `12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ((DCGI) Drugs Controller General of India) அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு வழியா இருப்பது தடுப்பூசி மட்டுமே. இதையெடுத்து ஒவ்வொரு வயதுக்கேற்றார் போல தடுப்பூசி செலுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது.
भारत की कोविड से लड़ाई अब और अधिक मज़बूत @CDSCO_INDIA_INF ने
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) April 26, 2022
>6 से <12 आयुवर्ग के लिए 'Covaxin'
>5 से <12 आयुवर्ग के लिए 'Corbevax'
12 से ऊपर के आयुवर्ग के लिए 'ZyCoV-D' की 2 डोज को
'Restricted Use in Emergency Situations' की मंज़ूरी दी है।
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 12 வயதினருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா தொற்றில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்படுவது அவசியம் என மருத்துவர்கள் நிபுணர்கள் குழு அறிவுறுத்தியிருந்தது.
ஏற்கனவே, 6 முதல் 12 வயதினருக்குட்பட்ட குழந்தைகளுக்கு, மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த பரிந்துரை செய்திருந்தது.
தற்போது, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசிகளை கட்டுப்பாட்டுடன் கூடிய அவசர காலத்திற்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது.
#COVID19 | DCGI grants emergency use authorisation to ZycovD (Zydus Cadila vaccine) for children above the age of 12 years: Sources
— ANI (@ANI) April 26, 2022
இந்த மாதம், சில நிபந்தனைகளுடன் ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோபோவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த Subject Expert Committee பரிந்துரைத்து இருந்தது.
இந்தாண்டு, ஜனவரி 3, 2022 முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்