CoWIN Registration: 12 முதல் 14 வயது வரை.. நாளை முதல் கொரோனா தடுப்பூசி.. ரிஜிஸ்டர் செய்வது எப்படி?
நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி நாளை முதல் போடப்படுகிறது.
![CoWIN Registration: 12 முதல் 14 வயது வரை.. நாளை முதல் கொரோனா தடுப்பூசி.. ரிஜிஸ்டர் செய்வது எப்படி? Covid 19 Vaccination CoWIN registration for Coronavirus jabs of aged 12-14 to begin tomorrow CoWIN Registration: 12 முதல் 14 வயது வரை.. நாளை முதல் கொரோனா தடுப்பூசி.. ரிஜிஸ்டர் செய்வது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/15/7532950d11aab863e51a72a7a11a64f2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
12 முதல் 14 வயதுக்குட்பட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு நாளை முதல் CoWIN இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி நாளை முதல் போடப்படுகிறது. இந்த நேரத்தின் முன் பதிவு அறிவிப்பையும் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, நாளை முதல் (மார்ச் 16) 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். குழந்தைகளின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவுக்கான தடுப்பூசியில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. முதலில் 45 வயதுக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு அதிகமானோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு ஜனவரி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் 12-14 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி நாளை முதல் போடப்படுகிறது.
ரிஜிஸ்டர் செய்வது எப்படி?
https://www.cowin.gov.in/ சென்று ஆதார் அடையாள அட்டை விவரங்களை குறிப்பிட்டு ரிஜிஸ்டர் செய்யலாம். ஆதார் இல்லை என்றால் மாணவர் அடையாள அட்டையை வைத்து ரிஜிஸ்டர் செய்யலாம். குடும்பத்தில் 4பேர் ஒரே தொலைபேசி எண்ணை குறிப்பிடலாம்
சீனாவில் மீண்டும் வேகம்..
சீனாவில் உள்ள பகுதிகளில் கடந்த இரண்டாடுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் என்ற பகுதியில் உள்ள 90 லட்சம் மக்களை கொண்ட அந்த மாகாணம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இதுவரை ஆறு கட்டங்களாக பெரிய அளவில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வசீனாவில் உள்ள 19 நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சாங்காய் மற்றும் தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் மூட்டப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதுவரை மூன்று மற்றும் நான்காம் அலை பரவலை நாடுகள் சமாளித்து வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)