அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
செகந்திரபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற கணவன் - மனைவி மீது பட்டுப்போன மரம் விழுந்ததில், சம்பவ இடத்திலே கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நேரங்களில் சில விபத்துக்கள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு துரதிஷ்டவசமாக நடந்துவிடும். அதுபோன்ற ஒரு மோசமான துயர சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவில் அமைந்துள்ளது செகந்திரபாத் முக்கியமான நகரம். இங்கு அமைந்துள்ள பகுதி பொல்லாரம்.
திடீரென விழுந்த பட்டுப்போன மரம்:
இங்கு அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த தனியார் மருத்துவமனைக்கு கணவன். மனைவி என இருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த மருத்துவமனையின் வளாகத்தில் பட்டுப்போன மரம் ஒன்று இருந்தது. நீண்ட நாட்களாக பட்டுபோகியுள்ள அந்த மரம் ஆபத்தான சூழலில், எப்போதும் விழும் சூழலில் இருந்தது.
இந்த சூழலில், கணவன் – மனைவி இருவரும் மருத்துவமனையின் உள்ளே வந்தபோது, பட்டுப்போன மரம் வேரோடு சாய்ந்தது. வேரோடு சாய்ந்த அந்த மரம், கணவன் – மனைவி இருவரும் வந்த ஸ்கூட்டர் மீது அப்படியே விழுந்தது. மிக அதிக எடை கொண்ட அந்த மரம் கணவன் – மனைவி இருவர் மீது விழுந்ததை கண்டு, அங்கிருந்தவர்கள் பதறியடித்த ஓடி வந்தனர்.
சம்பவ இடத்திலே பறிபோன உயிர்:
ஆனால், மரம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கணவன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயம் அடைந்தார். மனைவியை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் விவரங்கள் ஏதும் தெரியவில்லை. மருத்துவமனைக்கு சிகிச்சை வந்தவர்கள் மீது மரம் விழுந்ததில் கணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததும், மனைவி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் என்ற சூழலில் இருந்த பட்டுப்போன மரத்தை அகற்றாமலே வைத்திருந்தது ஏன்? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
மேலும் படிக்க: "குவைத்தில் கைதிகளாகியுள்ள தமிழக மீனவர்கள்" வௌியுறவுத்துறைக்கு மீண்டும் கடிதம் எழுதிய தமிழக அரசு!