மேலும் அறிய

Corona virus Cases in India: ஒரே நாளில்  3.57  லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.76 லட்சம், நேற்று 2.59 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.57 லட்சமாக குறைந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில்  3.57  லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Corona virus Cases in India: ஒரே நாளில்  3.57  லட்சம் பேர்  கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.76 லட்சம், நேற்று 2.59 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.57 லட்சமாக குறைந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 991-இல் இருந்து 2 கோடியே 62 லட்சத்து 89 ஆயிரத்து 290-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 331-ல் இருந்து 2 லட்சத்து 95 ஆயிரத்து 525-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 630 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735இல் இருந்து 2 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றி இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.25 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.12 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 29 லட்சத்து 23 ஆயிரத்து 400-ஆக குறைந்துள்ளது.  இதுவரை 19 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 819 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Breaking News LIVE : தூத்துக்குடியில் இன்று 4 செ.மீ மழைப்பதிவு
Breaking News LIVE : தூத்துக்குடியில் இன்று 4 செ.மீ மழைப்பதிவு
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Singai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..
Breaking News LIVE : தூத்துக்குடியில் இன்று 4 செ.மீ மழைப்பதிவு
Breaking News LIVE : தூத்துக்குடியில் இன்று 4 செ.மீ மழைப்பதிவு
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
Watch Video: ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!
ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
5 Years Of Super Deluxe : புனிதங்களை எல்லாம் நொறுக்கினார் குமாரராஜா.. 5 ஆண்டுகளை கடந்த சூப்பர் டீலக்ஸ்
புனிதங்களை எல்லாம் நொறுக்கினார் குமாரராஜா.. 5 ஆண்டுகளை கடந்த சூப்பர் டீலக்ஸ்
Embed widget