(Source: ECI/ABP News/ABP Majha)
Second dose vaccination : 70% தடுப்பூசிகளை இரண்டாம் டோசுக்கு ஒதுக்க வேண்டும்- மத்திய அரசு நிபந்தனை
தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறித்தியது.
முன்னதாக, கொரோனா தடுப்பு மருந்து வழங்கலின் நிலவரம் குறித்து சுகாதார செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆய்வு மேற்கொண்டார்.
அதிக அளவிலான பயனாளிகள் இரண்டாம் டோசுக்காக காத்திருகின்றனர். எனவே முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி கொண்ட அனைத்து பயனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இரண்டாம் டோஸ் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசு மூலம் வழங்கப்படும் தடுப்பு மருந்துகள் குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது. எனவே அதன் அடிப்படையில் மாநிலங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் வலியுறித்தினார்.
அதன் அடிப்படையில், மத்திய அரசு மூலம் பெறப்படும் 70 சதவிகித இலவச தடுப்பூசிகளை இரண்டாம் டோஸ்களுக்கு மட்டும் ஒதுக்க வேண்டும். மாநிலங்கள் விருப்பப்பட்டால் 100 சதவிகிதம் வரை கூட ஒத்துக்கலாம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பு மருந்து வீணாவதை தடுக்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பு மருந்துகள் வீணானால் மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஒதுக்கீட்டில் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
மாநிலங்கள் இரண்டு அல்லது மூன்று மூத்த அதிகாரிகளை நியமித்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் தினசரி ஒருங்கிணைத்து மாநிலங்கள் வைத்துள்ள நிலுவை கட்டணங்களையும், விநியோகங்களை முறைப்படுத்தலாம். இதே குழு தனியார் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி கையிருப்பு:
ஒட்டு மொத்தமாக ( மத்திய அரசு கொள்முதல் + மாநில அரசு கொள்முதல் + தனியார் மருத்துவமனைகள் கொள்முதல்) 97 லட்சத்திற்கும் அதிகமான (97.61) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு இதுவரை 76,43,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4.13 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,53,391 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,89,619 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின் வசம் கையிருப்பில் உள்ளன
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானவில் குறைவான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களும், குஜாரத் மாநிலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன.
18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் தமிழகத்தில் மிகக் குறைவு ;
நாடுமுழுவதும், இதுவரை 18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகளில் 30,39,287 (30 லட்சம்) பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழகத்தில் அதிகமான இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். எனினும், தமிழகத்தில் வெறும் 19,979 (18 - 44) பயனாளிகள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். எனவே, தமிழக அரசு இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி 18 - 44 வயது வரையிலான பயனாளிகளுக்கு தடுப்பூசியை ட வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.