Covid 19 Travel Guidelines: சர்வதேச விமான பயணிகளுக்கு காதலர் தினத்தில் இருந்து ஆஃபர்! தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு..!
கொரோனா பரவல் குறைந்து வருவதால், சர்வதேச விமானப் பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது.
ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ரிஸ்க் நாடுகள் பட்டியலை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை.
2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை
கொரோனா தொற்று குறைவால் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு RTPCR பரிசோதனையும் கட்டாயமில்லை.
சர்வதேச விமான பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Ministry of Health issues revised guidelines for international arrivals, to come in effect from 14th Feb
— ANI (@ANI) February 10, 2022
The demarcation of countries ‘at-risk’ & other countries removed.
Recommends 14 days self-monitoring post-arrival as against 7 days home quarantine as was mandated earlier. pic.twitter.com/oPJBKwCkak