Coonoor Helicopter Crash: தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டுக்கு சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிபின் ராவத் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற Mi17 V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
டெல்லியில் உள்ள பிபின் ராவத் இல்லத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகைhttps://t.co/wupaoCQKa2 | #TamilNadu | #HelicopterCrash | #Coonoor #Ooty #BipinRawat pic.twitter.com/KZuzUJqx0M
— ABP Nadu (@abpnadu) December 8, 2021
காட்டேரி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.இந்த சூழலில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவசரமாக கூடியது. அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
Delhi | Defence Minister Rajnath Singh reaches the residence of CDS Bipin Rawat pic.twitter.com/05DismLAq9
— ANI (@ANI) December 8, 2021
இதனையடுத்து அவர் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருக்கும் பிபின் ராவத்தின் வீட்டுக்கு சென்று ராவத் மகளை சந்தித்தார். மேலும் அவர் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!