Fuel Price Hike: ‛பைனலில் சதமடிக்காத குறையை பெட்ரோல் போக்கியது’ ப.சிதம்பரம் சாடல்!
சர்வதேச கச்சா எண்ணைய் விலை குறையும் போது, அதன் பலன்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைவதில்லை. மாறாக, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகப்படுத்திவருகிறது.
பெட்ரோல், டீசல் வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது என காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியது கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை!
இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை! இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது. மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்" என்று பதிவிட்டார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணைய் விலை குறையும் போது, அதன் பலன்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைவதில்லை. மாறாக, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகப்படுத்திவருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த வரி விகிதம் 200 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கடந்தாண்டு கொரோனா பொது முடக்க நாட்களில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை பல மடங்காக சரிந்தது. அப்போதும் கூட, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 90க்கு மேல் விற்பனையாகி வந்தது.
today petrol and diesel price : 49 நாட்களில் 30 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது ஒன்றிய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது ஒன்றிய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.