மேலும் அறிய

Rahul Gandhi Case: ராகுல் காந்தியை விடாது துரத்தும் அவதூறு வழக்கு..! 2 ஆண்டு சிறை தண்டனை, அடுத்து என்ன?

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு காரணமாக இருந்த வழக்கு என்ன என்பதை இங்கு அறியலாம்.

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு காரணமாக இருந்த வழக்கு என்ன என்பதை இங்கு அறியலாம்.

வழக்கின் விவரம்:

கடந்த 2019ம் ஆண்டுநடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய அப்போதையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக,  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை:

இந்த அவதூறு வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், திடீரென கடந்த மார்ச் 23-ந் தேதி வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த உத்தரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சூரத் நீதிமன்றம்.

பதவி பறிப்பு:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் அவரது பதவி பறிபோகும். அதனடிப்படையில், சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பேரில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. அவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற  கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. 

மேல்முறையீடு தள்ளுபடி:

 கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 3ம் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

உயர்நிதிமன்றத்தில் வழக்கு:

சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின் போது ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்படவில்லை என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மே 4-ந்தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த கோடை விடுமுறைக்குப் பின்னர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

நீதிமன்றம் அதிரடி:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர்ந்து, பாஜகவை வீழ்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனும் கீழமை நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரிய மனுவை, குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அடுத்து என்ன?

இதையடுத்து 2 ஆண்டுகள் சிறை தண்டனையிலிருந்து ராகுல் காந்தி தப்பிக்க, உச்சநீதிமன்றத்தை நாடுவதே ஒரே இறுதி வாய்ப்பாக உள்ளது. ஒருவேளை உயர்நீதிமன்றமும் அவருக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டால், அவர் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அதன்படி, ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்பதற்கும் தடை விதிக்கப்படும். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பு ராகுல் காந்தியின் அடுத்த 10 வருட அரசியல் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget