10th And 11th Result :10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை..
தமிழகத்தில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி நாளை வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி நாளை வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”மார்ச் ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கும், மேல்நிலை முதலாமாண்டு (-1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கும் வெளியாகும். தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. செய்தியாளர்கள் பகுப்பாய்வு அறிக்கையினை https://dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை காலை 10.00 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கும், பிற்பகல் 2.00 மணிக்கு மேல்நிலை முதலாமாண்டிற்கும் (1) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும் பகுப்பாய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனிதேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.
மொத்தம் 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். இந்நிலையில் 10 மற்றும் 11 -ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க