Arvind Kejriwal: ஞாயிற்றுக்கிழமை அரெஸ்ட் என்ற அர்விந்த் கெஜ்ரிவால்..! சொன்னது போல சிசோடியாவை கைது செய்த சிபிஐ..! நடந்தது என்ன?
Manish Sisodia Arrested: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது கீழ்த்தரமான அரசியல் என்றும் மக்கள் பதிலளிப்பார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிகழ்வானது கீழ்த்தரமான அரசியல் என முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
சிசோடியா கைது
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டை தொடர்ந்து, மணிஷ் சிசோடியா, இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். தொடர் விசாரணையை தொடர்ந்து, மணிஷ் சிசோடியா இரவு கைது செய்யப்பட்டார்.
கைதுக்கு முன்பு பேசிய சிசோடியா, "நான் 7-8 மாதங்கள் சிறையில் இருந்தால் கூட, என்னை நினைத்து வருத்தப்படாதீர்கள். பெருமை கொள்ளுங்கள். பிரதமர் மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயப்படுகிறார். எனவே, அவர் என்னை ஒரு போலி வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார் என தெரிவித்தார்.
அன்றே சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்:
இதற்கு முன்பு, பிப்.24, 25 தேதிகளில் ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நடைபெற்றது . 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.
பிப்ரவரி 25 ஆம் தேதி, ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய டெல்லி முதலமைச்சர், துணை முதல்வர் சிசோடியா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்படுவார் என்றும், இது குறித்தான தகவல்; கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னது போல, இன்றைய தினம சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனறைய தினம் சிசோடியா குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,
கல்வியில் ஒரு புரட்சி மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார். அப்படிப்பட்டவரை பொய் வழக்கில் சிக்க வைத்து, அவப்பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது"
”மக்கள் பதிலளிப்பார்கள்”
நானும், சிசோடியாவும் கடந்த 23 ஆண்டுகளாக நண்பர்கள் என்றும், கல்வியில் புரட்சி மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார். அப்படிப்பட்டவரை பொய் வழக்கில் சிக்க வைத்து, அவப்பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது".
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது கீழ்த்தரமான அரசியல் என்றும் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும் படிக்க: Manish Sisodia Arrested: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது - பெரும் பரபரப்பு..!