மேலும் அறிய

Chief Justice Of India : தந்தை இருக்கையில் மகன்! உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சந்திர சூட்...யார் இவர்?

Chief Justice Of India : இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற டி.ஒய்.சந்திரசூட் யார்? அவருடைய வரலாற்று சிறப்பு குறித்து காணலாம்.

Chief Justice Of India : இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற டி.ஒய்.சந்திரசூட் யார்?  அவருடைய வரலாற்று சிறப்பு குறித்து காணலாம்.

சந்திரசூட் பள்ளி, கல்லூரி வாழ்க்கை

டி.ஒய். சந்திரசூட்டின் முழுப்பெயர் தனஞ்ஜெயா சந்திரசூட். இவர் 1959ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தவர். அவரது தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். இந்தியாவிற்காக நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். டி.ஒய்.சந்திரசூட்டின் தாய் பிரபா இசைக்கலைஞர். டி.ஒய்.சந்திரசூட் மும்பையில் உள்ள கதிட்ரல் ஜான் கோனன் பள்ளியிலும், டெல்லியில் உள்ள செயின்ட் கொலும்பா பள்ளியிலும் படித்தார்.

பொருளாதாரத்திலும், கணிதத்திலும் டெல்லியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1982ம் ஆண்டு டெல்லி சட்டப்பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர், 1983ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

வழக்கறிஞர் பயிற்சி : 

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஜோசப் எச்.பீலே பரிசு வென்றுள்ளார். 1986ம் ஆண்டு சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். டெல்லியில் சட்டக்கல்லூரியில் பயின்றபோதே ஜூனியர் வழக்கறிஞராக பயிற்சி பெற ஆரம்பித்தார்.  ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சல்லிவன் மற்றும் க்ரோம்வெலில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

இந்தியா திரும்பிய பிறகு உச்சநீதிமன்றம் மற்றும் பாம்பே உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். 1998ம் ஆண்டு பாம்பே உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நீதிபதியாக பொறுப்பேற்கும் வரை கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஆப் இந்தியாவாக நியமிக்கப்பட்டார்.

முக்கிய பொறுப்புகள்: 

2000ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு மே 13-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி முதல் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் உறுப்பினர் ஆனார்.

இந்தியாவின் மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய குழுவான இந்த கொலிஜீயமே நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளையும், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளையும் நியமிக்க பரிந்துரை செய்வது ஆகும். மேலும், பல்வேறு நாடுகளின் சட்ட பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளையும் எடுத்துள்ளார்.

Chief Justice Of India : தந்தை இருக்கையில் மகன்! உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சந்திர சூட்...யார் இவர்?

சந்திரசூட்டின் சிறப்பான தீர்ப்புகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு தடை இல்லை என சிறப்பான தீர்பை வழங்கியதில் இவரும் ஒருவர் ஆவார். மேலும் அண்மையில் பெண்கள் கருகலைப்பு உரிமையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கி இருந்தார் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்ற தீர்ப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

50-வது தலைமை நீதிபதி

இந்திய உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பதவிக்காலம் முடிந்தததை அடுத்து, 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்றார். 74 நாட்கள் பதவியில் இருந்த லலித், நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனை அடுத்த சந்திர சூட்டை அடுத்த தலைமை நீதிபதியாக லலித்த பரிந்துரைத்தார்.

இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் இருப்பார். அதன்படி 2024-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி வரை பதவி வகிக்க உள்ளார் சந்திரசூட்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
Embed widget