மேலும் அறிய

Chandrayaan 3 Launch: ஜூலை 13-ஆம் தேதி ஏவப்படும் சந்திரயான்-3 விண்கலம்...வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி ஆய்வில் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் சந்திரயான்-3: 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வரும் ஜூலை 13ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, இஸ்ரோ உறுதி செய்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. சந்திரயான்-2 விண்கலத்தில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டரான விக்ரம்,  திட்டமிட்டபடி தரையிறங்கினாலும் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது.  'சாப்ட் லேண்டிங்' எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்தது. இதன் காரணமாக, ரோவரை திட்டமிட்டபடி தரையிறக்க முடியவில்லை.

இச்சூழலில், சந்திரயான்-3 குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், "சந்திரனைப் பற்றிய நமது புரிதலை சந்திரயான்-3 மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி, ரோபோ ரோவரை இயக்குவதாகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையைப் பயன்படுத்தி சந்திரயான்-3 ஏவப்பட உள்ளது" என்றார்.

தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

சந்திரயான்-3 திட்டத்தின் மதிப்பு, 615 கோடி ரூபாய் ஆகும். அபாயங்களைக் குறைத்து, வெற்றிகரமான பணியை உறுதி செய்வதற்கும் கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு சந்திரயான்-3 உட்படுத்தப்பட்டுள்ளது. பேலோட் கட்டமைப்பு உள்ளிட்ட வடிவமைப்பு, முந்தைய சந்திரயான திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த முறை, வெற்றியை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இஸ்ரோ எடுத்துள்ளது. சந்திரயான்-2 போன்றே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சந்திரயான்-3இல் அனுப்பப்பட உள்ளது. ஆனால், ஆர்பிட்டரை எடுத்துச் செல்லாது. தகவல்தொடர்பு செயற்கைக்கோள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உந்துவிசை பகுதி, விண்கலம் 100 கிமீ சந்திர சுற்றுப்பாதையில் செல்லும் வரை லேண்டர் மற்றும் ரோவரை எடுத்துச் செல்லும்.
 
இந்த விண்கலம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அறிவியல் சமூகத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாக இயக்கப்பட்ட விண்கலங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தை கொண்டு எதிர்கால நிலவு தொடர்பான ஆய்வை மேற்கொள்ள சந்திரயான்-3 உதவும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget