மேலும் அறிய

திரளபதி முர்முவை தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய அரசு

இசட் பிரிவு பாதுகாப்பால் துப்பாக்கி ஏந்திய சிஆர்எஃப் வீரர்கள், அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். 

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியினர் சார்பாக களமிறங்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த சின்ஹாவுக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பால் துப்பாக்கி ஏந்திய சிஆர்எஃப் வீரர்கள், அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். 

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யவதற்காக டெல்லியில்  சரத் பவார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் யஷ்வந்த சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு, அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் துணை தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த சிங்கா பதவி விலகுவதாக அறிவித்தார். அப்போதே குடியரசுத் தலைவர் வேடபாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

கடந்த 15 ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்ற வகையில் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அக்கூட்டத்தில்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சரத் பவார் மறுத்துவிட்டார். அதையடுத்து தேசியவாத மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் கோபால கிருஷ்ண காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் கசிந்தது.

சில நாட்களுக்கு முன்பு, பரூக் அப்துல்லா-வும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமனதாக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரளபதி முர்மு குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரளபதி முர்முவுக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்திருப்பதால் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget