கட்டணங்கள் குறித்து உண்மைத்தன்மை என்ன? ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
டெலிவரி மற்றும் பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
இ-காமர்ஸ் என்று சொல்லப்படக்கூடிய இணையவழி வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் முறையினை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய இணையவழி இ-காமர்ஸ் நிறுவனங்களின் மீது புகார்கள் எழுந்தன. இதனால் மத்திய அரசின் நோட்டீஸ் மூலம் அந்த புகாரின் உண்மைத்தன்மையை அறிய முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட உணவிற்கு, குறிப்பிட்ட அளவிலான பேக்கிங் மற்றும் டெலிவர் கட்டணம் தான் இருக்க வேண்டும் என்று இருக்க கூடிய சூழலில், நிறுவனங்களின் மீது புகார் எழுந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு, குறிப்பிட்ட அளவு பேக்கிங் மற்றும் டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் அறிய முடியும்.
புகார்களைக் களைய நடவடிக்கை
ஹோட்டலில் இருக்கக் கூடிய உணவுப் பட்டியலுக்கும், இ-காமர்ஸ் நிறுவனங்களில் இருக்கக் கூடிய விலைப் பட்டியலுக்கும் இடையிலான வித்தியாசம், என்பது பெரும் அள்விற்கு இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸினை அனுப்பியுள்ளது. மேலும் இட-காமர்ஸ் குறித்து எழும் புகார்களைத் தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாமல் பயனர்கள் புகார்களை தெரிவிக்காமலும் , புகார்களைக் களையவும் முடியாமல் உள்ளனர். குறிப்பாக ஹோட்டலில் உள்ள உணவுப் பட்டியலுக்கும், இ-காமர்ஸ் நிறுவனங்களில் உள்ள விலைப்பட்டியலுக்கும் உள்ள வித்தியாசம், மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் உணவினை டெலிவரி செய்யாமல் இருப்பதால், இதுகுறித்த புகார்களுக்கும் எந்தவிதமான பதில்களும் இ-காமர்ஸ் நிறுவனங்களால் சரியான பதிகள் தரப்படுவதில்லை என்ற புகார் பரவலாக இருக்கிறது. இதையடுத்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு டெலிவரி மற்றும் பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் மூலம், நுகர்வோரின் கேள்விகளுக்கும் குறைகளுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள், எவ்வாறு பதில் சொல்லப்போகின்றது எனவும், எப்படி குறைகளைக் களையப்போகிறது எனவும் கேள்வி கேட்டுள்ளது. மேலும் முறைகேடுகள் மற்றும் சீர் செய்யவேண்டிய விசயங்கள் குறித்தும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் நுகர்வோர் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
நுகர்வோர்கள் வரவேற்பு
இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இ-காமர்ஸ் மூலம் உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்