மேலும் அறிய

Wrestlers Protest : மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு முதல் வெற்றி...பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பிக்கு நெருக்கடி...உச்சநீதிமன்றம் அதிரடி..!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக பாலியல் புகார்:

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்பார்வை செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்தது.

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு மாதத்திற்கு இந்த குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு, தனது அறிக்கையை கடந்த 5ஆம் தேதி, விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்தது.

ஆனால், ஆறு பேர் கொண்ட குழுவின் முடிவுகளை அமைச்சகம் இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக  போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் புகார் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் அற போராட்டத்திற்கு முதல் வெற்றி:

இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் பேசுகையில், "சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் கடுமையான குற்றச்சாட்டுகள். இந்த விஷயத்தை இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன் சிங், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க கடுமையாக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். உதவியற்றதாக உணரும் அந்த நாளில் மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் என்றும் உணர்ச்சி பொங்க வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.

"எங்கள் மனதில் குரலை கேட்க முடியாதா?"

"நண்பர்களே, நான் எதைப் பெற்றேன் அல்லது இழந்தேன் என்பதை நான் சுயபரிசோதனை செய்து, போராடும் வலிமை என்னிடம் இல்லை என்று உணரும் நாளில், நான் உதவியற்றவனாக உணரும் நாளில், நான் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ மாட்டேன். நான் மரணத்தை விரும்புவேன். அத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக, மரணம் என்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்" என பிரிஜ் பூஷன் சிங் வீடியோவில் பேசியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், பாஜக எம்பியாக உள்ள பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரம் கேட்டுள்ளனர். "பிஎம் மோடி சார் 'பேட்டி பச்சாவ்' மற்றும் 'பேட்டி படாவோ' பற்றி பேசுகிறார். மேலும் அனைவரின் 'மன் கி பாத்'யும் கேட்கிறார். அவரால் எங்கள் 'மன் கி பாத்' கேட்க முடியாதா?" என ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hydrogen Stove; தண்ணீலே அடுப்பா... எல்பிஜி பற்றக்குறைக்கு புதிய தீர்வு.. விலை மற்றும் விவரங்கள்
Hydrogen Stove; தண்ணீலே அடுப்பா... எல்பிஜி பற்றக்குறைக்கு புதிய தீர்வு.. விலை மற்றும் விவரங்கள்
"தயவுசெய்து பொய் சொல்வதை நிறுத்துங்கள்!" – பவன் கல்யாணை நேருக்கு நேர் தாக்கிய பிரகாஷ் ராஜ்
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
RCB vs DC: சிவப்புக்கு பதில் பச்சை நிற ஜெர்சி... பெங்களூரு அணியின் 'கோ கிரீன்' ரகசியம் இதுதான்!
RCB vs DC: சிவப்புக்கு பதில் பச்சை நிற ஜெர்சி... பெங்களூரு அணியின் 'கோ கிரீன்' ரகசியம் இதுதான்!
MK Stalin Video: “புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
“புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
TVK Vijay: ”லிமிட்டே இல்லாமல் ஊழல் செய்த லிமிடெட் கம்பெனி.. விசில் புயலில் வீழ்வது உறுதி” - விஜய் ஆவேசம்
TVK Vijay: ”லிமிட்டே இல்லாமல் ஊழல் செய்த லிமிடெட் கம்பெனி.. விசில் புயலில் வீழ்வது உறுதி” - விஜய் ஆவேசம்
TVK Sengottaiyan: செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் என்ன? கோபியில் எடப்பாடி மறைத்த உண்மை தெரியுமா?
TVK Sengottaiyan: செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் என்ன? கோபியில் எடப்பாடி மறைத்த உண்மை தெரியுமா?
GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
Embed widget