Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், இனி அர்சு உதவிபெறும் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இனி அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில், திமுக அரசு புதுமைப் பெண் என்னும் திட்டத்தைத் தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்த புதுமைப் பெண் திட்டம்
இத்திட்டத்தினைச் செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணைய தளம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்தத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். இந்தத் திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் (Puthumai Penn Thittam) என்றும் பெயர் சூட்டப்பட்டது.
அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. சான்றிதழ், பட்டயம் , இளங்கலைப் பட்டம் , தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவைகளில் சேருபவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதேபோல தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பு
இந்த நிலையில் தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம். தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தூத்துக்குடியில் டிசம்பர் 30 ஆம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.#TNSED pic.twitter.com/oKDuYRuZqe
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) December 24, 2024
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.