Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் - சிக்கிய கார் - வீடியோ!
Watch Video: உத்தர பிரதேசம்: லக்னோவில் சாலையில் விழுந்த பள்ளம்...சிக்கிய கார்
உத்தர பிரதேசம் தலைநகரில் லக்னோவில் உள்ள சாலையில் விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று சிக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
லக்னோவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விகாஸ் நகரில், மழை நின்ற பிறகு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கின்றன. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிவப்பு நிற கார் ஒன்று சிக்கி கொண்டது. பள்ளத்தில் சிக்கி கொண்ட கார் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பதறவைக்கும் காட்சிகள் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அங்கிருந்தவர்களும் இதை ஸ்ம்பார்ஃபோன்களில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.
உத்தர பிரதேசம்: லக்னோவில் சாலையில் விழுந்த பள்ளம்...சிக்கிய கார்#Lucknow #Road #Car #UttarPradesh pic.twitter.com/ffQUc9Nots
— ABP Nadu (@abpnadu) March 4, 2024
லக்னோ பகுதியின் காவல் கண்காணிப்பாளர் ரோசன் ஜேக்கப் சாலையில் உள்ள பள்ளத்தை 24 மணி நேரத்திற்குள் சீர்படுத்த பொதுப்பணி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறது நேரத்திற்கு பிறகு, பள்ளத்தில் சிக்கியிருந்த கார் க்ரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. இதற்கு காரணம் பாதாள சாக்கடை வழித்தடத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
லக்னோவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதில் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மின்னல் விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
லஹிம்பூர் கெஹ்ரி, ஹர்டோய், சீதாபூர், ஷாஜகான்பூர் மற்றும் கெளசாம்பி ஆகிய ஊர்களில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், வானிலை ஆய்வு மைய தகவலின்படி, சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இன்றைக்கு பெரிதாக மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் தொடர்ந்து மழை பெய்து வருதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.