Grain Storage : ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில்...உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்...மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
நாட்டில் பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களில் 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
![Grain Storage : ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில்...உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்...மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! Cabinet Okays Rs 1 Lakh Crore To Create World Largest Grain Storage Capacity know more details here Grain Storage : ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில்...உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்...மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/31/253e6715affe1c3bcd53230c6c7484b91685542249936729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கூட்டுறவு துறையில் பயிர் சேதங்களைக் குறைத்து, விவசாயிகள் குறைந்த விலையில் விற்பனையை செய்வதை தடுக்கும் வகையிலும் நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திறனை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரவை 1 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்:
அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு துறையில் 700 லட்சம் டன் தானிய சேமிப்பு திறனை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ""கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பிளாக்கிலும் 2,000 டன் கொள்ளளவு கொண்ட குடோன் அமைக்கப்படும். இது கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த உதவும். ஏனெனில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) உணவு தானியங்களை சேமிப்பதில் பல்வகைப்படுத்த முடியும். நாட்டில் 1 லட்சம் பிஏசிஎஸ்கள் உள்ளன. அவற்றில் சுமார் 63,000 செயல்படுகின்றன.
திட்டத்திற்கான நிதி எங்கிருந்து வரப்போகிறது?
நாட்டின் உணவு தானிய உற்பத்தி சுமார் 3,100 லட்சம் டன்கள். சேமிப்பு திறன் மொத்த உற்பத்தியில் 47 சதவீதம் மட்டுமே. வளர்ந்த நாடுகளில் சேமிப்பக திறன் வெளியீட்டை விட அதிகமாக உள்ளது" என்றார்.
இதற்கான நிதி எங்கிருந்து வரும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர், "வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகங்களில் உள்ள நிதி பயன்படுத்தப்படும். தற்போது, நாட்டின் மொத்த தானிய சேமிப்பு திறன் சுமார் 1,450 லட்சம் டன்னாக உள்ளது.
உணவு தானிய விரயத்தைக் குறைக்கும்:
கூட்டுறவுத் துறையில் 700 லட்சம் டன் சேமிப்புத் திறன் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் மொத்த கொள்ளளவு 2,150 லட்சம் டன்னாக உயரும்" என்றார். திட்டத்தின் பலன்களை எடுத்துரைத்து பேசிய அனுராக் தாகூர், "உள்ளூர் அளவில் பரவலாக்கப்பட்ட சேமிப்புத் திறனை உருவாக்குவது உணவு தானிய விரயத்தைக் குறைத்து நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும்.
இது உணவு தானியங்களை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கும், கிடங்குகளில் இருந்து மீண்டும் ரேஷன் கடைகளுக்கு கையிருப்புகளை கொண்டு செல்வதற்கும் ஆகும் செலவை வெகுவாகக் குறைக்கும்" என்றார்.
நாட்டில் பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களில் 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)