Delhi Building Collapse: அடக்கடவுளே..! மளமளவென சரிந்து விழுந்த கட்டிடம் - 4 பேர் பலி, 16 பேரின் நிலை?
Delhi Building Collapse: டெல்லியில் எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Delhi Building Collapse: டெல்லியில் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய்களுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் உள்ளே 20க்கும் மேற்பட்டோர் இருந்ததாக நம்பப்படுகிறது, அவர்களில் கிட்டத்தட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடம் நான்கு மாடிகள் கொண்ட 'எல்' வடிவ அமைப்பை கொண்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 2:30 மணி முதல் 3:00 மணி இடைபட்ட நேரத்தில் நடந்துள்ளது.
#WATCH | A building collapsed in the Mustafabad area of Delhi, several feared trapped. Dog squad, NDRF and Police teams at the spot. Rescue operations underway.
— ANI (@ANI) April 19, 2025
More details awaited. pic.twitter.com/9yS3TKdxDm
மொத்தமாக சரிந்து விழுந்த கட்டிடம்
தீயணைப்பு அதிகாரி, பிரிவு அதிகாரி ராஜேந்திர அத்வால் சம்பவம் தொடர்பாக கூறுகையில், "அதிகாலை 2:50 மணியளவில் வீடு இடிந்து விழுந்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. எங்கள் ஆரம்ப குழுக்கள் வந்தபோது, முழு கட்டிடமும் இடிந்து விழுந்திருப்பதைக் கவனித்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. எங்கள் குழுக்கள் தற்போது சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றன. சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புப் படை மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன" என விளக்கமளித்தார். பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் சொல்வது என்ன?
இதற்கிடையில், கட்டிடத்திற்குள் சுமார் 30 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும், ஐந்து முதல் ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். "திடீரென இடிந்து விழுந்தது நான்கு மாடி கட்டிடம். உரிமையாளருடன் சேர்த்து குறைந்தது மூன்று முதல் நான்கு குடும்பங்கள் அங்கு குத்தகைதாரர்களாக வசித்து வந்தன. சுமார் 20 முதல் 25 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களில், இதுவரை ஐந்து முதல் ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் உயிருடன் இருந்த ஒருவரை நான் வெளியே கொண்டு வந்தேன்" என தெரிவித்துள்ளார்.