Viral Wedding : ”கல்யாணத்துக்கு வாங்க.. பந்திக்கு பணம் கொடுங்க” : அதிரடிகாட்டும் மணப்பெண்ணின் ப்ளான்..
கல்யாண செலவால் மனம் நொந்துபோன மணப்பெண் ஒருவர் திருமணத்துக்கு வரும் சொந்தக்காரர்களிடம் உணவுக்கான பணத்தை பெறப்போவதாக போஸ்ட் செய்துள்ளார்.
திருமணங்கள் என்றே கொண்டாட்டங்கள்தான். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி திருமணங்களை செய்வதே இந்தியாவில் வழக்கமாக உள்ளது. அதுவும் வடமாநிலங்களில் திருமணம் வாரக்கணக்கில் கொண்டாடப்படும். அவரவர்களின் வசதிக்கு ஏற்ப திருமணம் என்பது கொண்டாட்டமாக இருக்கும்.சிலர் இரு நாட்களில் திருமணத்தை முடித்துவிடுவார்கள். சிலர் ஒருவாரம் கொண்டாடுவார்கள். சைவம், அசைவம் என வகை வகையான உணவுகள் பரிமாறப்படும். அதேபோல் திருமணத்துக்கு செல்பவர்களும் வெறுங்கையோடு போகாமல் தங்களால் முடிந்த கிஃப்ட்டை கொடுப்பார்கள். அல்லது பணத்தை மொய்யாக வைப்பார்கள்.
இந்நிலையில் கல்யாண செலவால் மனம் நொந்துபோன மணப்பெண் ஒருவர் திருமணத்துக்கு வரும் சொந்தக்காரர்களிடம் உணவுக்கான பணத்தை பெறப்போவதாக போஸ்ட் செய்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்ட அந்த மணப்பெண், யாராவது உங்கள் திருமணத்தில் உறவினர்களிடம் சாப்பாட்டுக்கு பணம் கேட்டதுண்டா? எல்லாமே விலை அதிகமாக உள்ளது. நாங்கள் திருமணத்தை தள்ளி வைக்கலாமா என்றுகூட யோசிக்கிறோம். அல்லது உறவினர்களிடத்தில் கிஃப்டுக்கு பதிலாக பணத்தை வாங்கலாமா என்று நினைக்கிறோம். நான் ஏற்கெனவே பத்திரிகைகளை அனுப்பிவிட்டேன். இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் குழப்பமாகவும் சோகத்திலும் உள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய பதிவுக்கு பேஸ்புக் பயனர்கள் பலர் ரியாக்ட் செய்துள்ளனர். இது தொடர்பாக பதிவிட்ட ஒருவர், குறிப்பாக என்னிடம் கிஃப்ட்டுக்கு பதிலாக பணத்தை யாராவது கேட்டால் மகிழ்ச்சியடைவேன். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். சிலர் அந்தநாளில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட நினைப்பார்கள். அதனால் பணம் கேட்பதில் சிக்கல் ஒன்னும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணங்களில் இப்படி வித்தியாசம் என்றால் சில ஊரில் திருமணமே வித்தியாசமாக இருக்கும். Twitter thread மூலம் திருமண சடங்குகள் குறித்து யூடியூபர் ஆனி அருண் பகிர்ந்து கொண்ட திருமணம் மிகவும் வித்தியாசமானது. தக்சின கன்னடத்தில் நடைமுறையில் உள்ள பாரம்பரியத்தை பயனர் விரிவாக விளக்கினார். அங்கு, பிறக்கும்போது இறக்கும் ஒருவரை, பிறக்கும்போது இறந்த மற்றொரு நபருடன் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
“நான் இன்று ஒரு திருமணத்தில் கலந்துகொள்கிறேன். இது ஏன் ஒரு ட்வீட்டிற்கு தகுதியானது என்று நீங்கள் கேட்கலாம். சரி, மணமகன் உண்மையில் இறந்துவிட்டார். மேலும் மணமகளும் இறந்துவிட்டார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் இறந்துவிட்டனர்" என ஆனி அருண் பதிவிட்டுள்ளார். திருமணமானது இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. வழக்கமான திருமணத்தைப் போன்று அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது. "நிச்சயதார்த்தத்திற்காக இரண்டு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் செல்வார்கள். திருமண ஊர்வலம் இருக்கும். இறுதியாக தாலி கட்டப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
I'm attending a marriage today. You might ask why it deserve a tweet. Well groom is dead actually. And bride is dead too. Like about 30 years ago.
— AnnyArun (@anny_arun) July 28, 2022
And their marriage is today. For those who are not accustomed to traditions of Dakshina Kannada this might sound funny. But (contd)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்