மேலும் அறிய

Breaking News LIVE: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்!

Background

  • வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கிரஹ ஜோடி என்ற பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த  திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது எனவும், இதற்காக வாடிக்கையாளர் எண்ணுடன், வங்கியின் நுகர்வோர் எண் மற்றும் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஏசி கோச்சில் வெளியான புகை... பதறி போன பயணிகள்... ஒடிசா ரயிலில் பரபரப்பு..!

ஒடிசா ரயில் விபத்து உலக மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்திய நிலையில்,  செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சிலர், முதலில் B-5 பெட்டியில் புகை வருவதைக் கண்டு அலாரம் எழுப்பினர். பிரம்மாபூர் நிலையத்திற்கு வந்த போது  ஊழியர்கள் பிரச்னையை உடனடியாக சரி செய்தனர். முன்னதாக ரயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் மீண்டும் ரயிலில் ஏற மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • பிரதமரின் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு ரூ.27 கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு

முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி கடனுதவியாக மத்திய அரசு வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முத்ரா கடன் மூலம் பெண் சக்திகள் இன்று தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றனர் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

  • பதைபதைக்க வைக்கும் பயங்கரம்.. 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.. மீட்கும் பணி தீவிரம்..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷெஹோர் எனும் கிராமத்தில் 2.5 வயது குழந்தை ஒன்று 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.நேற்று மதியம் 2.45 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. கிராமவாசிகள் உள்ளூர் பஞ்சாயத்து அலுலவகத்தை அணுக அது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  இந்நிலையில் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

  • தேர்தல் நமது உரிமை; அதற்காக பிச்சை எடுக்க மாட்டோம்" - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா 

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். . ஜம்மு காஷ்மீரில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் கொஞ்சம் தைரியம் காட்டி, தாங்கள் அழுத்தத்தில் இருப்பதாகச் சொல்லட்டும். ஏதோ ஒன்று சரி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த சுறாவளி புயல்,  "பிபர்ஜாய்" (பிபோர்ஜாய் என்று உச்சரிக்கப்படுகிறது) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிபர்ஜாய் என்ற பெயருக்கு ஆபாயம் என்பது அர்த்தம். இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு  5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, அட்சரேகை (latitude) 12.3°N மற்றும் தீர்க்கரேகை (longitude) 66.0°E பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதாவது கோவாவின் மேற்கு-தென்மேற்கே சுமார் 910 கிமீ தொலைவில், 1030 கிமீ மும்பைக்கு தென்மேற்கே, போர்பந்தருக்கு தென்-தென்மேற்கே 1110 கி.மீ மற்றும் கராச்சிக்கு தெற்கே 1410 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில்,  கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து தீவிர சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

அரபிக்கடல் பகுதிகள்:

07.06.2023: வடக்கு கேரள– கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்   சூறாவளிக்காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல்  அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80  முதல் 90  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.06.2023:   கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு மற்றும்  தெற்கு அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90  முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல்  அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 95  முதல் 105  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.06.2023:   கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19:01 PM (IST)  •  07 Jun 2023

ஜுன் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்..

எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜுன் 23ம் தேதி பாட்னாவில் நடைபெறும் என ஜேடியு தலைவர் லாலன் சிங் அறிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்க அனைத்து எதிர்க்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஸ்டாலின், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:05 PM (IST)  •  07 Jun 2023

Breaking News LIVE: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமெடட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தின் 4ஜி, 5ஜி சேவைகளை வலுப்படுத்த ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

13:50 PM (IST)  •  07 Jun 2023

Breaking News LIVE: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் சந்திப்பு

13:49 PM (IST)  •  07 Jun 2023

Breaking News LIVE: குரூப்-4 கலந்தாய்வை நடத்தி, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

13:49 PM (IST)  •  07 Jun 2023

Breaking News LIVE: குரூப்-4 கலந்தாய்வை நடத்தி, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget