Breaking Live: ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE
Background
குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்புப் படை வீரர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட பாலம் மாலையில் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
விபத்து நடந்தது எப்படி?
நேற்று மாலை 6.42 மணிக்கு இந்த விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்னும் ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம். இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.
கேபிள் தொங்கு பால இடிந்து விழுந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.ஃபேன்ட் தீயணைப்பு படையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில முதல்வர் பூபேந்திர படேல் நிலைமையை கண்காணித்து வருகிறார், மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க மாநில அரசு எஸ்ஐடியையும் அமைத்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மோர்பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து விபத்துக்குப் பிறகு மோர்பி பாலத்தின் நிர்வாகக் குழுவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதியளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கேபிள் பாலம் இடிந்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் மோர்பி நகரம் திங்கள்கிழமை தானாக முன்வந்து ‘பந்த்’ கடைப்பிடிக்கவுள்ளது
Breaking Live: ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்
New IPS transfers and postings in Tamil Nadu: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை டிஜிபியாக இருந்த அம்ரேஷ் புஜாரி நியமனம், சிபிசிஐடி, ஏடிஜிபியாக அபய்சிங் குமார் நியமனம்.
குஜராத் பால விபத்து: பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு
குஜராத்தின் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து நேரிட்ட விபத்தில் 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த இடத்திற்கு பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம்-ஆஸ்திரேலியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 31ஆவது ஆட்டம் தொடங்கவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், அயர்லாந்தும் மோதுகின்றன.
அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிறையில் உயிரிழந்த ராம்குமார்- தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
சுவாதி கொலை வழக்கில் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் ராம்குமாரின் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், சுதந்திரமான விசாரணை நடத்தவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்செக்ஸ் 709 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 709 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.