Breaking News LIVE : நான்தான் கஜினி படத்துக்கு முதல் சாய்ஸ்.. கதை பிடிக்கல.. மாதவன் சொன்ன சீக்ரெட்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குடன் காலரா நோய் அறிகுறி தென்பட்டுள்ளது.
LIVE
Background
காலரா நோய் பரவல் எதிரொலியால் காரைக்காலில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குடன் காலரா நோய் அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்தும் வகையில் 114 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ளார்.
காரைக்காலில் சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குடன் அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலருக்கு காலரா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. காரைக்காலில் காலரா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கும் காலரா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, காரைக்காலில் மட்டும் சுமார் 1,589 பேருக்கு வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாாகியுள்ளனர். புதுச்சேரி முழுவதும் காலரா தொற்று பரவியிருப்பதை அறிந்த சுகாதாரத்துறை இன்று மாநிலம் முழுவதும் பொது சுகாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
*அதன்படி கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
*அனைத்து வீடுகளிலும் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், திருமணக்கூடங்கள், மருத்துவமனைகளில் கட்டாயம் கொதிக்க வைத்து குடிநீர் அல்லது சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கி 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் மன்சூர் முஹமது பிறப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மேலும், பொதுமக்கள் இனி வரும் நாட்களில் கொதிக்கவைத்த தண்ணீரை குடிக்கவும், சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவவும், காய்களை நன்றாக கழுவி, வேகவைத்து சமைத்து சாப்பிடவும் அந்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காலரா பாதிப்பு பரவி வருவதால் தமிழ்நாட்டிலும் காலரா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
முதிய பெண் ஒருவரை ஆதரவுடன் அணைத்து உணவளித்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ
Unscripted pure love and adoration - this is what a true leader receives when he selflessly works and fights for his people and his country. pic.twitter.com/4cbU0Khxce
— Congress (@INCIndia) July 3, 2022
12 மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.
Breaking News LIVE : தனியார் நிறுவனங்கள் ஜாமர் பயன்படுத்த தடை...!
ஜாமர் கருவி, ஜிபிஎஸ் பிளாக்கர் கருவிகளை தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை...மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது தவறானது..தனியார் நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை வாங்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ தடை என மத்திய அரசு உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வரும் 7-ந் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக: பொதுக்குழுவுக்கு தடை விதிக்க தனி நீதிபதியை அணுகலாம்- ஒ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மேலும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி தனி நீதிபதியை அணுகலாம் என்று கூறியுள்ளது.