Breaking LIVE: பெரியார் பல்கலை.பாலியல் வழக்கில் சிக்கிய பொறுப்பு பதிவாளர் சஸ்பெண்ட்..!
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Background
பெரியார் பல்கலை.பாலியல் வழக்கில் சிக்கிய பொறுப்பு பதிவாளர் சஸ்பெண்ட்..!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட கீழச்சேரி மாணவியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது!
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உடல் உடற்கூராய்வு முடிந்து சொந்த ஊரான தெக்களூரை கொண்டு செல்லப்பட்டது.
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதை எதிர்த்து பேரணி- ராகுல் காந்தி கைது
சோனியா காந்தியிடம் விசாரணை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி மேற்கொண்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்- பள்ளி நிர்வாகிகள்,ஆசிரியர்களை விசாரிக்க சிபிசிஐடி மனு!
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி மனு அளித்துள்ளது. இதற்கு அனுமதி வழங்க கோரி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நிதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. மனு அளித்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. சம்பந்தப்பட்டோர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் பேரணி- போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்!
சோனியா காந்தியிடம் விசாரணை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி மேற்கொண்ட ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிட்யைச் சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ரஞ்சித் ராஜன், (Ranjeet Ranjan) கே.சி. வேணுகோபல் (KC Venugopal,) மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) இன்ரான் பிரதாப்கிரி (Imran Pratapgarhi), கே. சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

