Breaking News LIVE :தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE

Background
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 300 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147. 50 கட்டணம். 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக தனது கருத்துக்களை கேட்க வேண்டும் என ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்.மேல் முறையீட்டு மனுமீது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக தனது கருத்துக்களை கேட்க வேண்டும் என ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்.
987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை
38 மாவட்டங்களில் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவிப்பு.
கிரிப்டோ கரன்சியை சர்வதேச ஒத்துழைப்புடன் தடை செய்ய வேண்டும் - நிர்மலா சீதாராமன்
கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க மத்திய ஆரசு சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்பிஐ பரிந்துரை. கிரிப்டோ கரன்சியை சர்வதேச ஒத்துழைப்புடன் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது - நிர்மலா சீதாராமன்
கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை
கிரிப்டோ கரன்சி குறித்து மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில். கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தகவல்

