Breaking LIVE: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் மாறுபட்ட கருத்து; நடவடிக்கை எடுக்க உத்தரவு
Breaking live: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் மாறுபட்ட கருத்து; நடவடிக்கை எடுக்க உத்தரவு
கனியாமூர் மாணவி மரண வழக்கில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உய்ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
சேலம் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1.6 லட்சம் கன அடியிலிருந்து, 1.7 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர்.
இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகம் மோதல் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் 64 பேர் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராகவும், தலா ரூ. 20,000 ரூபாய் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
விநாயகர் சதுர்த்தி: 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சென்னையில் மொத்தம் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.