Breaking LIVE: ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது - நீதிமன்றம்
இன்றைய தினத்தின் செய்திகள் உடனுக்குடன்...
LIVE

Background
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது - நீதிமன்றம்
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளை கையாளுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
மாற்றுத் திறனாளிகள், மன நலம் குன்றியோரை கையாளும் வகையில், காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சியளிக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றது
எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது
இலக்கிய உலகின் மிகப்பெரிய விருதான சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் அவர் எழுதிய மல்லிகாவின் வீடு என்ற சிறுகதைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் காளிமுத்துவுக்கு சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்க இருந்த பி.இ பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு
நாளை தொடங்க இருந்த பி.இ பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

