மேலும் அறிய

Breaking News LIVE: அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - ஓ.பன்னீர்செல்வம் 

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:  அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - ஓ.பன்னீர்செல்வம் 

Background

சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 

கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.

அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 278வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

அதன்படி இன்று (பிப்ரவரி 23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

21:25 PM (IST)  •  23 Feb 2023

Breaking News LIVE: சேலம் கமிஷனராக விஜயகுமாரி நியமனம்..! 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை  பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆவடி கூடுதல் காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஐ.பி.எஸ்., சேலத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தின் ஆணையராக இருந்த நஜ்முல் ஹோடா, ஆவடி கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜயகுமார் ஐபிஎஸ், ஆவடியின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் ஐஜி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

20:02 PM (IST)  •  23 Feb 2023

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - ஓ.பன்னீர்செல்வம் 

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

19:56 PM (IST)  •  23 Feb 2023

கோகுல்ராஜ் கொலை வழக்கு; யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு...

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

19:53 PM (IST)  •  23 Feb 2023

Breaking News LIVE: திமுக தனது வரலாற்றை மறந்து ஆளுநரை விமர்சிப்பதா? - கே. அண்ணாமலை கேள்வி

பொன்முடி குறித்து ஆளுநர் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

19:44 PM (IST)  •  23 Feb 2023

Breaking News LIVE: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! அ.தி.மு.க. எழுச்சி பெறும்..!" - ஆனந்தத்தில் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.-விற்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எழுச்சியுடன் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Embed widget