மேலும் அறிய

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது

மகாராஷ்டிரா ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது.

ஆர்.டி.எக்ஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைப் பிரிவில் வெடிப்பு நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடெட்டிவார் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காலை 10:30 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். வெடிப்பின் சத்தம் கிட்டத்தட்ட 5 கி.மீ தூரத்திற்கு கேட்டது. பந்தாரா அருகே அமைந்துள்ள ஜவஹர்நகர், ஒரு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின் தாயகமாகும்.

வெடிப்பு ஏற்பட்ட கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து தொழிற்சாலை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் ஏழு முதல் எட்டு தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் அதிகாரிகள் உள்ளனர். மீட்பு குழுக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழுவும் தயாராக உள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget