Breaking News Live: கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
![Breaking News Live: கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை Breaking News Live: கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/f8858806479c84305207233f4702096f_original.jpg)
Background
பிளஸ் 1, பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது.
நாளை இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்..!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டுமென அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது
தேச துரோக குற்றத்தின் கீழ் கைது செய்க - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
ஆளுநருக்கு எதிராக வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேச துரோக குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் விசாரணை
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்
ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக வெளிநடப்பு..!
ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்தவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. - ஈபிஎஸ்
தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது - ஈபிஎஸ்
ஆளுநர் மீது தாக்குதல் நடக்கும் முயற்சியை ஏன் முன்கூட்டியே உளவுத்துறை கணித்து கூறவில்லை - ஈபிஎஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)