Breaking News Live: ஊரக வேலை திட்ட நிதி : மத்திய அரசு பதில் அளிக்க ஆணை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
சென்னையில் 12வது நாளாக தொடர்ந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
மக்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்..!
பெரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மக்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக இருந்தால்தான் ஆதரவு வழங்குவார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் : சென்னை உயர்நீதிமன்றம்
சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மலைப்பகுதிகளில் டாஸ்மாக் - திரும்பப் பெற உயர்நீதிமன்றம் கெடு..!
மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் 25 க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ஊரக வேலை திட்ட நிதி : மத்திய அரசு பதில் அளிக்க ஆணை
அந்நிய நாட்டு மரங்களை அகற்ற ஊரக வேலை திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இளையராஜாவின் கருத்தை ஏன் ஏற்க முடியவில்லை” - தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து
"இளையராஜாவின் கருத்தை இடதுசாரிகள், எதிர்க்கட்சிகளால் ஏன் ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள்தான் இளையராஜாவின் கருத்தை எதிர்கின்றனர்” - தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து