Breaking News LIVE : தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் - ஆளுநர் தமிழிசை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் - ஆளுநர் தமிழிசை
தேநீர் விருந்து நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறினார். எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என்றும், காரணமின்றி புறக்கணிக்க வேண்டாம் எனவும் கூறினார்.
இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? - எல்.முருகன்
What is #Ilaiyaraaja sir crime?
— Dr.L.Murugan (@Murugan_MoS) April 16, 2022
That he has a point of view which the @arivalayam and their eco-system doesn’t like?
The Constitution of India allows #freedomofexpression and by denying the same to Ilaiyaraaja sir, DMK has shown its anti-Dalit and anti-Constitution nature.
இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? - எல்.முருகன்
இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? - எல்.முருகன்
தேர்தல் வியூகம் - சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். 2024 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோ விளக்கமளித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது.
2024 தேர்தல் வியூகம் குறித்து 4 மணிநேரமாக, சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - காங்கிரஸ்
2024 தேர்தல் வியூகம் குறித்து 4 மணிநேரமாக, சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோர் விளக்கம் - காங்கிரஸ்