Breaking News LIVE: திருவள்ளூர் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் பலி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
நாளை கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே, 6 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்றுகன்னியாகுமரி வந்தடைந்தார். முன்னதாக, தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.
கார் மூலம் மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலை சென்ற பிரதமர், அங்கு சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு தியானத்தை தொடங்கிய அவர், நாளை மதியம் தியானத்தை முடித்து வைக்கிறார். அதன்பின் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் வெப்பநிலை கடுமையாக உயரத்தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 நாட்களாக 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் டெல்லி அரசாங்கம் வெப்பநிலைக்கான எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேபோல் நேற்று பீகாரில் வெப்ப அலை தாக்கம் காரணமாக, 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்.
Breaking News LIVE: திருவள்ளூர் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் பலி
Breaking News LIVE: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Breaking News LIVE: ஜூன் 2ல் 11 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம்
வரும் ஜூன் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மோடி தியானத்தை நம்புகிறார். அவர் நடவடிக்கை அனைத்தையும் எதிர்கட்சிகள் விமர்சிக்க அவசியமில்லை - ராம்தாஸ் அதாவ்லே
#WATCH | Delhi: On PM Modi's visit to Tamil Nadu for meditation, Union Minister Ramdas Athawale says, "...The PM believes in meditation. The PM has gone there to think about what to do next for the country and society. The opposition is accusing him of wrong things. The… pic.twitter.com/cHNurgU7qa
— ANI (@ANI) May 31, 2024
திருமலை திருப்பதியில் மனைவியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
#WATCH | Andhra Pradesh: Union Home Minister Amit Shah along with his wife Sonal Shah, offers prayers at the Tirupati Balaji Temple.
— ANI (@ANI) May 31, 2024
(Source: Tirumala Tirupati Devasthanams Board) pic.twitter.com/h3ij9Vhlbo
Breaking News LIVE: மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - தமிழ்நாடு அரசு பெருமிதம்..!
மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின் துறை பல முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.