Breaking News LIVE: மேற்கு வங்கத்தில் நடந்த ஊழலில் இழந்த ரூ. 3,000 கோடியை திரும்பக் கொண்டு வருவேன் - பிரதமர் மோடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் மே 30 ல் இருந்து 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றார்.இந்த பயணம் முழுக்க முழுக்க பிரதமரின் தனிப்பட்ட பயணமாக அமையவுள்ளது.
- உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இதனிடையே பக்தர்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் திருவாங்கூர் தேவஸ்தானம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அந்த வகையில் பக்தர்களுக்கு விரைவில் காப்பீட்டு திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு செய்யும்போது பக்தர்களிடம் இருந்து ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று, ரஃபேல் நடால் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 14 முறை சாம்பியனான அவரின் தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விரைவில் நடால் ஓய்வு பெறப்போகிறார் என தகவலும் வெளியாகியுள்ளது.
PM MODI Exclusive: எதிர்க்கட்சி தலைவர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?
பிரதமர் மோடி பதில் தெரிவித்ததாவது, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நல்ல உறவு உள்ளது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்தான கவலை எழுந்த போது ஆறுதல் தெரிவித்தேன். மேலும் 2019 தேர்தலின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலமுறை அணுகியதாகவும் பிர்தமர் மோடி குறிப்பிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் நடந்த ஊழலில் இழந்த ரூ. 3,000 கோடியை திரும்பக் கொண்டு வருவேன் - பிரதமர் மோடி
இப்பேட்டியில் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், தனது நிர்வாக பாணி குறித்தும் , அவரது அணி குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தில் நடந்த ஊழலில் இழந்த ரூ. 3,000 கோடியை" திரும்பக் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதி குறித்தும் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
கத்திரி வெயிலின் கடைசி நாளின் சென்னையில் கொளுத்திய வெயில்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் அதிகபட்ச அளவாக வெயில் பதிவாகியுள்ளது.இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
Breaking News LIVE: சுமத்ரா தீவுக்கு அருகே நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே இன்று மாலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 5.5, On: 28/05/2024 17:22:41 IST, Lat: 3.14 N, Long: 95.84 E, Depth: 10 Km, Location: Off West Coast of Northern Sumatra.
— National Center for Seismology (@NCS_Earthquake) May 28, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/k8CX6e27uw
முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது - பி.ஆர். பாண்டியன்
கேரள அரசு முல்லைப் பெரியாற்றின் அருகே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருகிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.