![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking News LIVE: ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
![Breaking News LIVE: ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை Breaking News LIVE: ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/07/0c7dab1c4aab6a69b54d854449228ed11717727369102589_original.jpg)
Background
சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஜூன் 20 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் வரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால், பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றது. இந்நிலையில் 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டன என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராவது ராகுல் காந்திக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை
ஜூன் 10ம் தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் தரப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி.
VIDEO | PM Modi (@narendramodi) meets President Droupadi Murmu, stakes claim to form government. pic.twitter.com/uI7J21y5IS
— Press Trust of India (@PTI_News) June 7, 2024
பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரதமர் மோடி வருகை
மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக மோடி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்றுள்ளார்.
பக்ரீத் பண்டிகை : களைகட்டும் பாவூர்சத்திரம் ஆட்டுச்சந்தை
தென்காசி: பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் இன்று நடைபெற்ற விற்பனையில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்று வருகின்றனர். 5,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 40,000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)